மா.சு மாசற்றவர் தான்... ஆனால்?

மா.சு மாசற்றவர் தான்... ஆனால்?

சுகாதாரத் துறையில் கடந்த 4 வருடங்களாக மருத்துவர், செவிலியர், டெக்னீஷியன்கள் உள்ளிட்டவர்களுக்கு பணி மாறுதல் அளிக்கப்படவில்லை. இதற்காக முறையாக விண்ணப்பித்தாலும், கட்சிக்காரர்கள் மூலமாக முயன்றாலும் பணிமாறுதல் கிடைக்கவில்லை என்று புலம்புகிறார்கள். இந்த விவகாரத்தில் சொந்தக் கட்சியினரே சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீது அதிருப்தியில் இருக்கிறார்கள். அதேசமயம், அமைச்சரின் உதவியாளரான தியாகராஜன் எம்எல்ஏ ஹாஸ்டலிலேயே தங்கி பணிகளைக் கவனித்து வருகிறாராம். அமைச்சரே முடியாது என்று சொல்லும் வேலைகளும் தியாகராஜனை சந்தித்து ‘சவுண்டாக’ப் பேசினால் சத்தமில்லாமல் முடிந்துவிடுகிறதாம். சுகாதாரத் துறையில் பல்வேறு இடங்களில் பணிபுரிந்துவிட்டு தற்போது இங்கு வந்து அமர்ந்திருக்கும் தியாகராஜன் கோடிகளுக்கு அதிபதி என்று சுகாதாரத் துறையில் இருப்பவர்களே கோடிட்டுக் காட்டுகிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in