ஆர்எஸ்எஸ் புகழ்பாடும் ஆளுநர் ஆரிப்!

ஆரிப் முகமது கான்
ஆரிப் முகமது கான்

கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமதுகான், இஸ்லாமியராக இருந்தாலும் ஆர்எஸ்எஸ் அமைப்புடன் மிகவும் நெருங்கிய நட்பு உள்ளவர். அதனால் மாநிலத்தில் இடதுசாரிகளோடு பல தருணங்களில் முட்டிக்கொண்டு நிற்கிறார். இந்நிலையில், ஆரிப் முகமதுகான், அண்மையில் கேரளம் வந்திருந்த ஆர்எஸ்எஸ் அகில இந்திய தலைவர் மோகன் பகவத்தை திருச்சூரில் நேரில் போய் சந்தித்தது சர்ச்சையானது.

ஆனால் இதுபற்றி கேட்பவர்களிடம், “1986-ம் ஆண்டு முதலே எனக்கு ஆர்எஸ்எஸ் இயக்கத்தினருடன் நல்ல பரிட்சயம் உள்ளது. வாஜ்பாஜ் தன்னை சுயம் சேவக் என்றே சொல்லிக்கொள்வார். இவ்வளவு ஏன்... நேரு பிரதமராக இருந்தபோது ஆர்எஸ்எஸ் அமைப்பினரை குடியரசுதின அணிவகுப்புக்கே அழைத்திருக்கிறார். 1978 -ம் ஆண்டு தேசத்தையே உலுக்கிய ஷா பானு ஜீவனாம்ச வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்காக ஆர்எஸ்எஸ் அமைப்பே நின்றது. இப்படிப்பட்டவர்களிடம் நட்பாக இருப்பதில் என்ன தவறு இருக்கிறது?” என ஆர்எஸ்எஸ் புகழ் பாடுகிறாராம் ஆளுநர் ஆரிப் முகமதுகான்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in