கோவாவில் கட்சிமாறிகள் செய்த கைவண்ணம்!

பாஜக தலைவர்களுடன், கட்சி மாறிய கோவா காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள்...
பாஜக தலைவர்களுடன், கட்சி மாறிய கோவா காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள்...

ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணம் போய்க்கொண்டிருக்கும் நிலையில், கோவாவில் காங்கிரஸ் ஒற்றுமையைக் குலைத்திருக்கிறது பாஜக. காங்கிரசுக்கு அங்கிருந்த 11 எம்எல்ஏ-க்களில் 8 பேர் பாஜகவுக்கு தாவிவிட்டார்கள். போனவர்கள் சும்மா போகாமல் ‘இந்திய தேசிய காங்கிரஸ் - கோவா’ என்ற அம்மாநில காங்கிரஸ் கட்சியின் முகநூல் பக்கத்தை ‘பாஜக - கோவா’ என மாற்றிவிட்டுப் போயிருக்கிறார்கள். முகநூலின் முகப்பிலும் ’கை’ சின்னத்தைத் தூக்கிவிட்டு ’தாமரை’யை வைத்துவிட்டார்கள்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கோவா முன்னாள் முதல்வர் திகம்பர் காமத் தான் கட்சியின் முகநூல் பக்கத்துக்கான அட்மினாக இருந்தாராம். அவரே பாஜகவில் ஐக்கியமாகிவிட்டதால் காங்கிரஸ்காரர்களை கடுப்பேற்றவும் பாஜக முகாமைக் குளிர்விக்கவும் இந்தக் காரியத்தையும் செய்துவிட்டாராம் காமத்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in