காரை சரிசெய்யோணும் காசு குடுங்க!
சிவராசு

காரை சரிசெய்யோணும் காசு குடுங்க!

கடந்த சில வாரங்களுக்கு முன்பு, திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு சாலை விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அந்த விபத்தில் பழுதான அரசுக்குச் சொந்தமான இன்னோவா காரை சரிசெய்ய 13 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறதாம். இதற்கு வழி தெரியாமல் தவித்த ஆட்சியரை அழைத்த மாவட்ட அமைச்சர் நேரு, இன்னோவா தயாராகும் வரை, உள்ளூர் பயன்பாட்டுக்கு பயன்படுத்து வதற்காக தனக்கு வழங்கப்பட்டிருக்கும் அரசாங்க காரை பயன்படுத்திக் கொள்ளுமாறு சொன்னாராம். ஆனாலும் அமைச்சரின் மீதான பயபக்தி காரணமாக அந்தக் காரின் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்காத சிவராசு, தனது அலுவலகத்திலிருந்த பழைய ஸ்கார்ப்பியோவை துடைத்து தூசிதட்டி பயன்படுத்தி வருகிறார். இன்னொரு பக்கம், “கலெக்டர் காரை சரிசெய்யோணும்” என்று சொல்லி, ஆட்சியர் அலுவலகத்தில் சிலர் கலெக்‌ஷன் பாக்ஸைத் திறந்துவைத்திருக்கிறார்களாம்.

Want to read the full story?

We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.

Already have an account? Sign In

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in