என்னோட ஷேரக் குடுங்க சாரே?

என்னோட ஷேரக் குடுங்க சாரே?
தளபதி

பொதுவாக, அரசு கான்ட்ராக்ட் சம்பந்தமான கமிஷன் விவகாரங்களில் ஆளும்கட்சி மாவட்டச் செயலாளர்களுக்கும் ஒரு ஷேர் கொடுப்பதுதான் நடைமுறை வழக்கம். ஆனால், மதுரையில் கடந்த 3 மாதங்களில் நடந்த நெடுஞ்சாலைத் துறை கான்ட்ராக்ட் தொடர்பான கமிஷன்களை அங்குள்ள அமைச்சர் ஒருவரே கலெக்ட் பண்ணிவிட்டாராம். அதில் தனக்கும் ஒரு ஷேர் இருப்பதாக, திமுக மாநகர் மாவட்டச் செயலாளரும் எம்எல்ஏ-வுமான தளபதி எவ்வளவோ கேட்டுப் பார்த்தாராம். “அதெல்லாம் முடியாது, இது அமைச்சருக்கானது” என்று அடம்பிடிக்கிறாராம் அந்த அமைச்சர். ”ஊரு நியாயம் பேசுறவருக்கு உள்ள நியாயம் தெரியலையே” என புலம்பும் தளபதி, விஷயத்தை தலைவர் ஸ்டாலினின் கவனத்துக்குக் கொண்டு செல்லும் முடிவில் இருக்கிறாராம்.

Related Stories

No stories found.