மார்க்சிஸ்ட்களுக்குள்ளேயே மல்லுக்கட்டு!

ஜார்ஜ் எம். தாமஸ்
ஜார்ஜ் எம். தாமஸ்

கேரளாவில், மார்க்சிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான டி.ஒய்.எஃப்.ஐ நிர்வாகியாக இருப்பவர் சாஜி. இஸ்லாமியரான இவர் தனது காதலியான கிறிஸ்தவ மதத்தைச்சேர்ந்த ஜோய்ஸ்னாவுடன் அண்மையில் தலைமறைவானார். இந்தச் சம்பவம் குறித்து பொதுவெளியில் பேசிய முன்னாள் எம்எல்ஏ-வும், கோழிக்கோடு மாவட்ட மார்க்சிஸ்ட் கமிட்டி உறுப்பினருமான ஜார்ஜ் எம்.தாமஸ், “இது லவ் ஜிகாத்” என விமர்சித்தார். கிறிஸ்தவரான தாமஸ் தனது தொகுதியில் உள்ள வலுவான கிறிஸ்தவ வாக்காளர்களைத் திருப்திப்படுத்தவே இப்படி பேசினாராம். ஆனால், தாமஸின் இந்தப் பேச்சுக்கு மார்க்சிஸ்ட் கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. “யாரும், யாரையும் காதலிக்கலாம் என்னும் கம்யூனிச சித்தாந்தத்தையே தாமஸ் கேள்விக்குறியாக்கி விட்டதாகவும், அதனால் அவர் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்" எனவும் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர் மார்க்சிஸ்ட்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in