காத்திருக்கும் காந்திசெல்வன்

 ஸ்டாலினை சந்தித்தபோது...
ஸ்டாலினை சந்தித்தபோது...

ஒரு காலத்தில், நாமக்கல் மாவட்ட திமுக செயலாளர், மத்திய இணை அமைச்சர் என இரட்டை அதிகாரத்துடன் கோலோச்சியவர் செ.காந்திசெல்வன். இடையில் இவர் மீது கொண்ட அதிருப்தியால், நாமக்கல் மாவட்ட திமுகவை இரண்டாகப் பிரித்து கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக அதிகாரக் குறைப்பு செய்தது தலைமை. பிறகு, அந்த அதிகாரமும் பறிக்கப்பட்டது. சற்று இடைவெளிக்குப் பிறகு தலைமையிடம் பணிந்து போய், மீண்டும் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ஆனார் காந்திசெல்வன். ஆனால், 2019-ல் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் திமுக பெருவாரியாக தோற்கக் காரணம் காந்திசெல்வன் தகுதியான நபர்களுக்கு சீட் கொடுக்காதது தான் என சிலர் புகார் கிளப்பியதால் மீண்டும் பதவியிழந்தார். இந்த நிலையில், தற்போது மீண்டும் தெம்பாக வலம்வர ஆரம்பித்திருக்கிறார் காந்தி. ஏப்ரல் 18-ம் தேதி தனது பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினையும், உதயநிதி ஸ்டாலினையும் சந்திக்க நேரம் கேட்டிருந்தாராம் காந்திசெல்வன். இருவரும் மறுக்காமல் நேரம் ஒதுக்கி சந்தித்தார்களாம். அந்த சந்திப்பு தொடர்பான படங்களைப் பொதுவெளியில் பகிர்ந்து உற்சாகமாய் வலம்வருகிறார் காந்திசெல்வன். இதைவைத்து, “மீண்டும் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் பதவி அண்ணனுக்குத்தான்” என ஆர்ப்பரிக்கிறது காந்திசெல்வன் முகாம். ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில் தற்போதைய மாநிலங்களவை எம்பி-யாக இருக்கும் ராஜேஸ்குமாரிடம் இருந்து கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் பதவி பறிக்கப்படலாம் என்பது இவர்களின் யூகம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in