தனியாளாய் உட்கார்ந்திருக்கும் தங்கமணி!

தங்கமணி
தங்கமணி

ஆட்சியில் இருந்த நாட்களில் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் நாமக்கல் ஆலாம்பாளையம் வீடானது கட்சிக்காரர்களாலும், அரசு அதிகாரிகளாலும் மூச்சுத் திணறும். அதிகாலையில் போனாலும் நான்கு பேர் அவரைப் பார்க்க அங்கே உட்கார்ந்திருப்பார்கள். ஆனால் இப்போது, நிலைமை தலைகீழ். தங்கமணியின் வீடு இருக்கும் தெருவே வெறிச்சோடிக் கிடக்கிறது. இதுகூட பரவாயில்லை... தங்கமணி போன் போட்டால் அரசு அதிகாரிகள் சிலர் போனைக்கூட எடுக்காமல் அலட்சியம் காட்டுகிறார்களாம். அண்மையில் சிபாரிசு ஒன்றுக்காக அதிமுக பிரமுகர் ஒருவர் தங்கமணியின் வீட்டுக்குப் போனாராம். தனியாளாக உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த தங்கமணி விஷயத்தைக் கேட்டுவிட்டு, “இப்பெல்லாம் நம்ம சொல்றத யாரும் கேக்குறதில்லப்பா...” என்று சொல்லிவிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு போன் போட்டாராம். அவர் சொன்னது போலவே அந்த அதிகாரி போனை எடுக்கவில்லை. விடாமல் மறுபடியும் அடித்திருக்கிறார் தங்கமணி. இம்முறை லைனில் வந்த அந்த அதிகாரி, கொஞ்சமும் பிடிகொடுக்காமல் பேசிவிட்டு இணைப்பைத் துண்டித்தாராம். அப்படியே சிபாரிசு வந்தவர் பக்கம் திரும்பிய தங்கமணி, “பார்த்தீல்ல... இதுதான் இப்ப நமக்கிருக்கிற மரியாதை” என்று நொந்துபோய் சொன்னாராம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in