அதிமுகவினருக்கு வலைவிரிக்கும் அபேஸ் பார்ட்டிகள்!

அதிமுகவினருக்கு வலைவிரிக்கும் அபேஸ் பார்ட்டிகள்!

கடந்த சில தினங்களுக்கு முன்பு, பிரபல மூன்றெழுத்து கார்ப்பரேட் நிறுவனத்தின் ஊழியர்கள் எனச் சொல்லிக்கொண்டு தென் மாவட்ட அதிமுக முக்கிய தலைகளை ஒரு குழு ரகசியமாக சந்தித்துப் பேசியதாம். மதுரை - அழகர்கோவில் சாலையில் உள்ள ஸ்டார் ஓட்டல் ஒன்றில் இந்த சந்திப்புகளை நிகழ்த்திய அந்தக் குழு, “உங்களிடம் கணக்குக் காட்டமுடியாத கறுப்புப் பணம் ஏதும் இருந்தால் நம்பி எங்களிடம் தரலாம். அதையெல்லாம் வேறு வழியில் உங்களுக்கு ஒயிட் ஆக்கித் தருகிறோம். எங்களிடம் 10 சி கொடுத்தால் அதை 12 சி ஆக திருப்பிக் கொடுப்போம். இதற்கான ஏஜென்ட் கமிஷன் மட்டும் தந்தால் போதும்” என்று நயமாகப் பேசியதாம். “கேட்க நல்லா இருந்தாலும் எங்காளுங்க யாரும் அவங்க பேச்சுக்கு மசியல” என்று சொல்கிறார் இந்த சிட்டிங்கில் பங்குபெற்ற ஒரு அதிமுக தலை. திமுகவினரிடம் கைவரிசை காட்டினால் அதிகார பலத்தை வைத்து லாடம்கட்டிவிடுவார்கள் என்பதால் அதிமுகவினருக்கு இந்தக் குழுவினர் அழகாகப் பேசி வலைவிரிப்பதாகச் சொல்கிறார்கள். இவர்களிடம் யார் சிக்கப் போகிறார்களோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in