ஜெய்சங்கர் வருகையின் மெய்யான காரணம்?

ஜெய்சங்கர் வருகையின் மெய்யான காரணம்?

2024 மக்களவைத் தேர்தலில் தென் மாநிலங்களில் கணிசமான தொகுதிகளை வென்றெடுக்க இப்போதே தந்திர வித்திகளை தேட ஆரம்பித்துவிட்டது பாஜக. மத்திய நிதித் துறை இணை அமைச்சர் டாக்டர் பகவத் கிஷன்ராவ் காரத் கன்னியாகுமரி, கோவை தொகுதிகளைச் சுற்றி வருகிறார். இதேபோல், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடந்த வாரம் அவசர விசிட்டாக கேரளம் வந்தார். திருவனந்தபுரத்தில் ஆலய தரிசனம், கட்சி நிகழ்ச்சிகள் என கலந்துகட்டிய அவர், டெல்லி திரும்பும் நேரத்தில் பாஜகவினருக்கு சில முக்கிய கட்டளைகளை பிறப்பித்துச் சென்றிருப்பதாகச் சொல்கிறார்கள். மக்களவைத் தேர்தலுக்காக தென் மாநிலங்களில் மத்திய அமைச்சர்களை பொறுப்பாளர் களாக நியமித்து வரும் பாஜக தலைமை, கேரளத்துக்கான பொறுப்பை ஜெய்சங்கரிடம் மறைமுகமாக ஒப்படைத்திறதாம். இதை வெளிப்படையாகவே போட்டுடைத்தார் கேரள முதல்வர் பினராயி விஜயன். இதற்குப் பதிலளிக்கும் விதமாக பேசிய ஜெய்சங்கரோ, “கேரள மக்களின் மனநிலையைப் புரிந்து கொள்ளவும், கட்சியினருடன் கலந்துரையாடவுமே நான் இங்கு வந்தேன்” என்று சொன்னார். ஆனாலும், கேரளத்தில் பாஜகவுக்கு வலுவான அடித்தளம் உள்ள நான்கு தொகுதிகளை குறிவைத்தே ஜெய்சங்கரை கேரளத்துக்கு ட்ரிப் அனுப்பியிருக்கிறது பாஜக தலைமை என்கிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in