முந்திரி கடத்தலும் முன்னாள் மந்திரி விளக்கமும்!

முந்திரி கடத்தலும் முன்னாள் மந்திரி விளக்கமும்!
சி.த.செல்லப்பாண்டியன்

தனது மகன் ஜெபசிங் முந்திரி லாரியைக் கடத்தியதாக கைது செய்யப்பட்டதால், முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் சோர்ந்து விடுவார் என அவரது அரசியல் எதிரிகள் எதிர்பார்த்தார்கள். ஆனால், அவர் முன்னைவிட வேகமாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். போதாதுக்கு, ‘எனது மகன் ஜெபசிங்குக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவர் என்னைவிட்டு பிரிந்து போய்விட்டார். அவருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என பத்திரிகை விளம்பரங்கள் மூலம் தன்னிலை விளக்கமும் கொடுத்துள்ளார். ‘அரசியலுக்காக அண்ணாச்சி சொந்த மகனையே கைவிட்டுட்டாரே’ என விசனப்படுகிறார்கள் செல்லப்பாண்டியனின் சொந்தபந்தங்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in