ரூட்டை மாற்றிய ஈபிஎஸ்!

ரூட்டை மாற்றிய ஈபிஎஸ்!
எடப்பாடி பழனிசாமி

சேலம் மாவட்ட தேர்தல் பிரச்சாரத்துக்காக கூடுதலாக மூன்று நாட்களை ஒதுக்கி இருக்கிறார் ஈபிஎஸ். முதல்வர் ஸ்டாலின் தனது காணொலி வழி பிரச்சாரத்தில், சேலம் மாவட்டத்துக்கு என்ன செய்தார் எடப்பாடி பழனிசாமி என கேட்டதுடன், எடப்பாடியாரின் குற்றச்சாட்டுகளுக்கும் பதிலடி கொடுத்தார். அடுத்ததாக 16-ம் தேதி சேலத்துக்கு உதயநிதியும் வருகிறார். இதனால், சேலம் மாவட்டத்தில் திமுகவின் கை ஓங்கிவிடுமோ என அஞ்சுகிறாராம் ஈபிஎஸ். மாவட்டத்தில் மொத்தம் உள்ள 11 தொகுதிகளில் 10 தொகுதிகள் இப்போது அதிமுக வசம். அப்படி இருக்கையில், உள்ளாட்சித் தேர்தலில் திமுகவின் கை ஓங்கினால் சொந்தக் கட்சியினரே தன்னை நோக்கி விமர்சனக் கணைகளை வீசுவார்கள் என்பதாலேயே, சேலம் மாவட்டப் பிரச்சாரத்துக்கு கூடுதலாக மூன்று நாட்களை ஒதுக்கினாராம் ஈபிஎஸ்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in