கறுப்புப் பட்டியலில் காண்ட்ராக்டர்?

கறுப்புப் பட்டியலில் காண்ட்ராக்டர்?
ஈபிஎஸ்

அண்மையில் டெல்டா பயணம் வந்திருந்தபோது, எடப்பாடியாரின் இன்னோவா கிரிஸ்டா காரின் ஹெட்லைட் பழுதாகிவிட்டதாம். உடனே, திருச்சியைச் சேர்ந்த லீடிங் காண்ட்ராக்டர் திருக்குமரனுக்குத் தகவல் சொன்னாராம் உதவியாளர். எடப்பாடியார் திருச்சி வந்து சேர்ந்ததும் சம்பந்தப்பட்ட கார் கம்பெனிக்காரர்களை ஸ்பாட்டுக்கே வரவைத்து, மின்னல் வேகத்தில் ஹெட்லைட்டை சரிபண்ணிக்கொடுத்தாராம் காண்ட்ராக்டர். தேர்தல் சமயத்தில், திருச்சி மேற்கு மற்றும் கிழக்குத் தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை இவர் மூலமே கவனித்துக் கொண்டதாக, திமுகவினர் செய்தி பரப்பினார்கள். இந்த நிலையில் இப்போது, காண்ட்ராக்டர் திருக்குமரனுக்கு காண்ட்ராக்ட் பணிகள் எதுவும் ஒதுக்கமுடியாதபடிக்கு, அவரை பிளாக் லிஸ்ட்டில் வைக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சொல்லிவிட்டாராம் அமைச்சர் நேரு. இதற்கெல்லாம் சளைக்காத திருக்குமரன், “நீதிமன்றத்தில் முறையிட்டு நியாயம் கேட்பேன்” என்று சொல்லிக்கொண்டிருக்கிறாராம்.

Related Stories

No stories found.