வாயைக் குடுத்து வம்புல மாட்டிக்காதீங்கோ..!

ஈபிஎஸ்
ஈபிஎஸ்

ஓபிஎஸ் தரப்பில் மனதில் பட்டதை தைரியமாக மீடியாவில் பேச பலரும் தயங்குகிறார்கள். ஆனால், ஈபிஎஸ் தரப்பில் மீடியாக்களிடம் பேசி தங்கள் இருப்பை வெளிக்காட்டிக்கொள்ள பலரும் போட்டி போடுகிறார்கள். சிலபேர், அவர்களே மீடியா நண்பர்களுக்கு போன் போட்டு, “என்ன... பேட்டி எடுக்க நேத்தே வர்றேனீங்க” என்றெல்லாம் கேட்கிறார்களாம். ஆனால், “தென் மாவட்டத்தைச் சேர்ந்த முக்குலத்தோர் சமூகத்து விஐபிக்கள் யாரும் கட்சி நிலவரம் குறித்து இப்போதைக்கு மீடியாக்களிடம் எதுவும் பேசவேண்டாம். நீங்கள் எதையாவது சொல்லப் போய் அதைவைத்துக் கொண்டு ஓபிஎஸ் தரப்பு பிரச்சினையை உண்டாக்கலாம். அதனால் நமக்குச் சாதகமான இறுதித் தீர்ப்பு வரும் வரை யாரிடமும் தேவையில்லாமல் வாயைக் கொடுத்துவிடாதீர்கள்” என்று அணைபோட்டு வைத்திருக் கிறாராம் அண்ணன் எடப்பாடியார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in