இதற்காகத்தான் தங்கத் தேர் இழுத்தாரா ஈபிஎஸ்?

இதற்காகத்தான் தங்கத் தேர் இழுத்தாரா ஈபிஎஸ்?
எடப்பாடி பழனிசாமி

சேலம் ஜாகீர் அம்மாபாளையம் பழனியாண்டவர் கோயிலில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திடீரென தங்கத்தேர் இழுத்து வழிபாடு நடத்தியுள்ளார். கட்சிக்கு வெளியில் இருந்தாலும், தானே அதிமுக பொதுச்செயலாளர் என அழுத்தம் திருத்தமாகச் சொல்லி வருகிறார் சசிகலா. இந்த விஷயத்தில் இனியும் பிடிவாதம் பிடிக்க வேண்டாம் என்ற முடிவுக்கு வந்திருக்கும் எடப்பாடியாரும், இப்போதுள்ள அரசியல் சூழ்நிலைக்கு சின்னம்மா கட்சிக்குள்ள வந்தால் தான் சரியா இருக்கும் போலிருக்கிறது என்று தனக்கு நெருக்கமான வட்டாரத்தில் பேச ஆரம்பித்திருக்கிறாராம். கட்சிக்குள் சசிகலா வந்துவிட்டால் ஆளும் கட்சியின் பார்வை முழுவதும் அவர் மீது திரும்பிவிடும். தனக்கு அதிகம் ஆபத்திருக்காது என்பது அவரது யோசனையாம். இது தொடர்பாக சசிகலா தரப்புக்கும், எடப்பாடியார் தரப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் சொல்கிறார்கள். இந்த முயற்சிகள் சுமுகமாக முடியவும் தனது தலைக்கு வரும் ஆபத்துகள் எல்லாம் தலைப்பாகையுடன் போக வேண்டியுமே பழனியாண்டவருக்கு பழனிசாமி தங்கத் தேர் இழுத்ததாக சேலத்துப் பக்கம் சேதி சொல்கிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in