எங்கிட்டுப் போனாலும் கேட் போட்டா எப்பூடி?

எங்கிட்டுப் போனாலும் கேட் போட்டா எப்பூடி?
எடப்பாடி பழனிசாமி

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மாயமானதாக கூறப்படும் ஆவணங்களில் எடப்பாடி பழனிசாமி சம்பந்தப்பட்ட சமாச்சாரங்களும் இருந்ததாம். அதைக் கைப்பற்றப் போய்த்தான் அவரும் இந்த வழக்கின் சந்தேக வளையத்தில் சிக்கிக் கொண்டார் என்கிறார்கள். இந்தச் சிக்கலில் இருந்து எடப்பாடியாரை காப்பாற்ற ஆளும்கட்சி அமைச்சர் ஒருவரே சில பல சித்து வேலைகளைச் செய்தாராம். அந்த அமைச்சர் எதிலாவது எசகுபிசகாக சிக்கமாட்டாரா என எதிர்பார்த்துக் கொண்டிருந்த மக்களவை பிரநிதிநிதி ஒருவர், சமயம் பார்த்து இந்த டீல்களை எல்லாம் திமுக தலைமையின் காதில் கொட்டிவிட்டாராம். இதையடுத்து, தலைமையால் வைக்கப்பட்ட அர்ச்சனையில் அமைச்சருக்கு குளிரையும் தாண்டி வியர்த்துக் கொட்டியதாம். இதற்குப் பிறகு அமைச்சர் இந்த விவகாரத்தை கேட்டாலே தலைதெறிக்க ஓடுவதால், இனி யாரைப் பிடித்து இந்த வழக்கை சமாளிப்பது என்று தெரியாமல் குழம்பிப் போய் நிற்கிறதாம் எடப்பாடியார் முகாம்.

Related Stories

No stories found.