துண்டிக்கப்பட்ட மின்சாரம்... துவண்டு கிளம்பிய துரைமுருகன்!

துரைமுருகன்
துரைமுருகன்

காட்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. தான் படித்த பள்ளி என்பதால் நிகழ்ச்சியில் உற்சாகமாகக் கலந்து கொண்டார் அமைச்சர் துரைமுருகன். அதே உற்சாகத்தோடு மைக் பிடித்தவர், “என் உயிரோடும் உதிரத்தோடும் கலந்தது இந்தப் பள்ளி. இந்த வழியாக நான் செல்லும் போதெல்லாம் இந்தப் பள்ளியைப் பார்க்காமல் போகமாட்டேன்” எனத் தனது ட்ரேட் மார்க் புன்னகையுடன் பேச்சைத் தொடங்கினார்.

அப்போது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சென்டி மென்ட்டாக ஃபீல் பண்ணி முகம் வாடிய துரைமுருகன், தனது இருக்கையில் சென்று அமர்ந்துவிட்டார். அதற்குப் பிறகு தொடர்ந்து பேசவோ அங்கே இருக்கவோ விரும்பாத துரைமுருகன், பேருக்கு ஒன்றிரண்டு பேருக்கு மட்டும் மிதி வண்டிகளை வழங்கிவிட்டு காரைக் கிளப்பச் சொல்லிவிட்டார். தனது விழாவில் அதுவும், தான் பேசும்போது மின்சாரம் துண்டிக்கப்பட்ட விஷயத்தை கட்சிக்காரர்களிடம் சொல்லிப் புலம்பிய துரைமுருகன், “அமைச்சர் ஃப்ங்ஷன் இருக்குன்னு தெரியாதா... இப்படி திடீர்னு கரன்டைக் கட் பண்றாங்கன்னா அவங்களுக்கு என்ன தைரியம் இருக்கும்?” என கொதித்து விட்டாராம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in