தம்பிக்குப் பிறந்த நாள்... தடதடக்கும் போஸ்டர்கள்!

தம்பிக்குப் பிறந்த நாள்... தடதடக்கும் போஸ்டர்கள்!

மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு நாளை பிறந்த நாள். இதற்காக எந்த வருடமும் இல்லாத அளவுக்கு இம்முறை, மதுரைக்குள் திரும்பிய பக்கமெல்லாம் துரைக்கு வாழ்த்துச் சொல்லி போஸ்டர்கள் பளிச்சிடுகின்றன. “என்ன இந்த வருசம் இத்தன ஆர்ப்பாட்டம்?” என்று துரை தரப்பு ஆட்களைக் கேட்டால், “அண்ணனே (அழகிரி) இந்தத் தடவை பிறந்த நாள் கொண்டாட்டத்தைக் குறைச்சிக்கிட்டார். தம்பி துரைக்கும் ஆடம்பரமா பிறந்த நாள் கொண்டாடி எல்லாம் பழக்கம் இல்லை. தம்பியை திமுகவுக்குள் கொண்டுவர அண்ணன் எடுத்த முயற்சிக்கும் இன்னும் எந்த பலனும் கிடைக்கல. இந்த நிலையில, மதுரைக்குள்ள இருக்கிற சிலபேரு, துரை பிறந்தநாளுக்காக போஸ்டர்களை ஒட்டி கவனம் ஈர்த்திருக்காங்க. இப்படி போஸ்டர் ஒட்டுனதுல சில கரடுமுரடான ஆளுங்களும் இருக்காங்க. கடந்த மூணு நாளா தமிழகம் முழுக்க ரவுடிகளை தேடித் தேடி அரெஸ்ட் பண்ணிட்டு இருக்கு போலீஸ். தேவைப்பட்டால் குண்டர் சட்டமும் பாயும்னு டிஜிபி சைலேந்திர பாபு சொல்லிருக்கார். போலீஸ் அப்படி ஏதும் தங்கள் வீட்டுப்பக்கம் வண்டியைத் திருப்பிடக் கூடாங்கிறதுக்காகவே சிலபேரு வாண்டடா துரைக்கு வாழ்த்துச் சொல்லி போஸ்டர் ஒட்டிருக்காங்க” என்றார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in