அண்ணாமலைக்கே அரோகரா போட்ட சரவணன்!

முன்பு சரவணன் பாஜகவில் இணைந்த போது...
முன்பு சரவணன் பாஜகவில் இணைந்த போது...

மதுரை மாவட்ட பாஜக தலைவராக இருந்த டாக்டர் சரவணனை திமுகவுக்குள் இழுத்துப்போட முன்கூட்டியே பிளான் போட்டு விட்டார்களாம். இதற்கான பொறுப்பு முன்னாள் துணை மேயர் மிசா பாண்டியன் உள்ளிட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாம். ஆனால், திமுகவுக்கு வந்தால் தனக்கு மதுரை மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பதவி கிடைக்குமா என டீல் பேசினாராம் சரவணன். இதற்கு தலைமையிலிருந்து சரியான பதில் வராமல் இழுபட்டுக் கொண்டிருந்த நிலையில் தான் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீச்சு களேபரத்தை நடத்தி விட்டார்கள் பாஜககாரர்கள். இதையே சாக்காக வைத்து டாக்டரிடம் பேசிய இழுப்புக் குழுவினர், “இது தான் சமயம். இப்பையும் வரலைன்னா, உங்க ஆஸ்பத்திரி வெவகாரத்தை எல்லாம் வில்லங்கமாக்கி சீல் வெச்சிருவாங்க” என்று திகிலூட்டினார்களாம். இதன்பிறகே இரவோடு இரவாக பிடிஆரின் பாளை இல்லத்துக்குப் புறப்பட்டாராம் சரவணன். இந்த டீல் நடப்பது தெரியாமல் பி.டி.ஆருக்கு எதிரான விஷயங்களைத் திரட்டிக் கொடுக்கும் பொறுப்பை சரவணனிடம் ஒப்படைத்திருந் தாராம் பாஜக தலைவர் அண்ணாமலை. இதை நம்பி மதுரைத் தம்பிகள் சிலர் பி.டி.ஆருக்கு எதிரான சில விஷயங்களை சரவண னிடம் தொகுத்துக் கொடுத்தார்களாம். இப்போது சரவணன் திமுகவுக்கு ஜம்ப் ஆகும் மனநிலையில் இருப்பதால், தகவல் திரட்டிக் கொடுத்த தம்பிகள் ஜர்க் ஆகிக் கிடக்கிறார்களாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in