
மருத்துவக் கல்லூரிகள் திறப்பு விழாவுக்காக, பிரதமர் மோடியின் மதுரை வருகையையொட்டி பாஜக சார்பில் ‘மோடி பொங்கல்’ விழாவுக்கும் ஏற்பாடு செய்திருந்தார்கள். இந்த விழாவை முன்னிறுத்தி, ஏகப்பட்ட கனவுக் கோட்டைகளைக் கட்டிவைத்திருந்தாராம் கட்சியின் புதிய வரவும் மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவருமான டாக்டர் சரவணன். இந்த விழாவை வைத்தே, மதுரை மேயர் வேட்பாளராக தன்னை மோடி முன்னிலையில் பாஜகவினரை முன்மொழிய வைத்துவிடலாம் என திட்டம்போட்டு, அதற்காக ஆட்களையும் தயார்படுத்தி வைத்திருந்தாராம் சரவணன். இந்நிலையில், கரோனா கட்டுப்பாடுகளைக் காரணமாகச் சொல்லி பிரதமர் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதால் மருத்துவர் ஐயா ஏகத்துக்கும் அப்செட் என்கிறார்கள்.