சரவணனை திமுகவில் சேர்க்காதீங்கோ!

டாக்டர் சரவணன்
டாக்டர் சரவணன்

அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசிய சம்பவத்தைத் தொடர்ந்து பாஜகவைவிட்டு விலகப் போவதாக அறிவித்தார் மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் சரவணன். ஆனால், அதற்கு முன்பாக முந்திக்கொண்டு அவரைக் கட்சியைவிட்டு நீக்கினார் பாஜக தலைவர் அண்ணாமலை. இதையடுத்து, சரவணனை மீண்டும் திமுகவின் இணைக்க முயற்சிகள் நடக்கின்றன. இதுகுறித்து காமதேனுவில் ஏற்கெனவே நாம் எழுதி இருந்தோம். அதற்கேற்ப தனது வாட்ஸ் - அப் டிபி-யாக ஸ்டாலின் படத்தை மாற்றி இருக்கிறார் சரவணன். ஆனாலும் அவரை திமுகவில் சேர்க்க இன்னும் சிக்னல் கிடைக்காத நிலையில், சரவணனை கட்சியில் சேர்ப்பதற்கு எதிராக திமுகவுக்குள்ளேயே சிலர் போர்க்கொடி தூக்குகிறார் களாம். ‘சரவணனைக் கட்சியில் சேர்க்க வேண்டாம். அப்படிச் சேர்த்தால் அவர் இங்கேயும் வந்து குழப்பத்தை ஏற்படுத்துவார்’ என பகுதிச் செயலாளர்கள் சிலர் திமுக தலைமைக்குக் கடிதம் எழுதி இருக்கிறார்களாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in