ஐயாவின் உதவியாளர் அப்டேட்!

ஐயாவின் உதவியாளர் அப்டேட்!

பாமக நிறுவனர் ராமதாஸுக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக உதவியாளராக இருந்தவர் நடராஜன். ஐயாவின் குறிப்பறிந்து செயல்படும் இந்த நடராஜனை அண்மைக்காலமாக தைலாபுரம் தோட்டத்துப் பக்கம் பார்க்கமுடியவில்லை என்கிறார்கள். நடராஜன் ஒதுக்கிவைக்கப்பட்டாரா ஓய்வுபெற்றுவிட்டாரா என்று தெரியாத நிலையில், இதுவரை அவர் செய்துவந்த பணிகளை கவனிக்க புதிதாக ராஜா என்பவரை நியமித்திருக்கிறாராம் சின்னவர். இந்த ராஜா, ராமதாஸின் துணைவியார் சரஸ்வதி அம்மாளின் தூரத்துச் சொந்தம் என்கிறார்கள். “என்னதான் ராஜா அனைத்தையும் குறையின்றி கவனித்துக் கொண்டாலும் ஐயாவுக்கு நடராஜனைப் போல வராது” என்கிறார்கள் பாமக வட்டாரத்தில்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in