அருமனையின் ‘அருமை’ திருமாவுக்குத் தெரியுமா?

திருமாவுடன் ஸ்டீபன்
திருமாவுடன் ஸ்டீபன்

குமரி மாவட்டத்தில், அருமனை வட்டார கிறிஸ்தவ இயக்கத்தை நடத்திவரும் அருமனை ஸ்டீபன், அண்மையில் திருமாவளவன் முன்னிலையில் விசிகவில் இணைந்தார். அவருக்கு கட்சியின் சமூக நல்லிணக்கப் பேரவையின் தென் மண்டல அமைப்புச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஸ்டீபன் நடத்தும் கிறிஸ்துமஸ் விழாவில், மறைந்த ஜெயலலிதா தொடங்கி எடப்பாடி பழனிசாமி வரை அரசியல் ஆளுமைகள் பங்கேற்று வந்திருக்கிறார்கள். இதை வைத்தே, தன்னை வளப்படுத்திக் கொண்டதாகவும் ஸ்டீபன் மீது புகைச்சல் உண்டு. அண்மையில், பிரதமர் மோடியை விமர்சனம் செய்து பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தவரும் இவரே. இது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் விடப்பட்ட ஸ்டீபன், இளம்பெண் ஒருவரை கடத்தி, கூட்டுப் பாலியல் கொடுமை செய்த வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டார். இந்த வரலாறு எல்லாம் தெரிந்துதான் ஸ்டீபனை சிறுத்தையாக அங்கீகரித்தாரா திருமா என, சொந்தக் கட்சியினரே சற்றுக் குழம்பிப் போயுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in