வீட்டுச் சாவியையும் பிடுங்கீட்டாங்க!

வீட்டுச் சாவியையும் பிடுங்கீட்டாங்க!
ரமேஷ்

முந்திரித் தொழிற்சாலை தொழிலாளி கோவிந்தராஜ் கொலை வழக்கில், எசகுபிசகாக மாட்டிக்கொண்டு நிற்கிறார் கடலூர் திமுக எம்பி ரமேஷ். இதையே தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு சொந்தக் கட்சிக்காரர்கள் அவரைப் போட்டுப் பார்க்கிறார்களாம். நெய்வேலியை உள்ளடக்கிய எம்பி மற்றும் எம்எல்ஏக்களுக்கு என்எல்சி நிறுவன குடியிருப்புப் பகுதியில் வீடு ஒதுக்கித் தருவது வழக்கம். ரமேஷுக்கும் அப்படி ஒரு வீடு கொடுக்கப்பட்டது. அந்த வீட்டை ரமேஷ் பயன்படுத்தாமல் வைத்திருந்தார். இந்நிலையில், “அந்த வீட்டின் சாவியை அண்ணன் வாங்கிவரச் சொன்னார்” என்று, அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் உதவியாளர் பாலமுருகன் வாங்கிச் சென்றாராம். அத்தோடு வீட்டுச் சாவி அங்கிருந்து திரும்பவில்லையாம். ”கோடீஸ்வரனான எனக்கு அந்த வீடு ஒண்ணும் பெரிய விஷயமில்லை. ஆனா, பெரிய மனுசனா அடையாளம் காட்டிக்கிற சிலபேரு, ஏன் இப்படி அல்பத்தனமா இருக்காங்கன்னு தெரியலையே” என்று நெருக்கமானவர்களிடம் புலம்பிக் கொண்டிருக்கிறாராம் ரமேஷ்.

Related Stories

No stories found.