எல்லாமே மாப்பிள்ளை சார் தான்!
ஸ்டாலின்

எல்லாமே மாப்பிள்ளை சார் தான்!

திமுக அமைச்சர்கள் தங்களுக்குத் தேவையான காரியங்களை எல்லாம் நீக்குப் போக்காக சாதித்துக் கொள்கிறார்கள். ஆனால் கட்சிக்காரர்கள் யாராவது பெரிய ஆப்ளிகேஷனோடு வந்தால், “எங்க கையில எதுவும் இல்லை. எல்லாம் மாப்பிள்ளை சார் தான்” என ஆட்சி மேலிடத்தை கைகாட்டி எஸ்கேப் ஆகிவிடுகிறார் களாம். அண்மையில், தலைமைக்கு நெருக்கமான அமைச்சர் ஒருவரை சந்தித்த திமுகவினர் சிலர், அவரது துறை சார்ந்த ஒரு ஆப்ளிகேஷனை நீட்டினார்களாம். அதை வாங்கிப் பார்த்த அமைச்சர், “டிவியில நாங்க குடுக்கிற பேட்டியை எல்லாம் பாத்து தப்புக் கணக்குப் போட்டுடாதீங்க. நாங்களெலாம் பேருக்குத்தான் அமைச்சர். மத்ததெல்லாம் மாப்பிள்ளை தான். தளபதியே அவரைக் கேக்காம எதுவும் செய்யமாட்டார். அதனால, நீங்களே நேரடியா அவரைப் பார்த்து இது விஷயமா பேசிடுங்க. ஒன் டு ஒன் வேலை ஈஸியா முடிஞ்சுரும்” என்று சொல்லி வந்தவர்களை வழியனுப்பி வைத்தாராம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in