கௌதமசிகாமணிக்கு கள்ளக்குறிச்சி கசப்பது ஏன்?

கௌதம சிகாமணி
கௌதம சிகாமணி

கள்ளக்குறிச்சி தொகுதி எம்பி-யான அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதமசிகாமணி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தை கண்டுகொள்வதே இல்லை என திமுகவினரே புலம்புகிறார்கள். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளும் சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு, கங்கவள்ளி, ஆத்தூர் ஆகிய மூன்று தொகுதிகளும் சேர்ந்ததுதான் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி. ஆனால், சேலம் மாவட்ட எல்லைக்குள் நடக்கும் அரசு விழாக்கள் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்துகொள்ளும் கௌதமசிகாமணி, கள்ளக்குறிச்சி எல்லைக்குள் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் அதில் கலந்துகொள்ள அவ்வளவாய் அக்கறைப்படுவதில்லை என்கிறார்கள். திமுகவினர் பிரியப்பட்டு தங்கள் இல்ல விழாக்களுக்கு அழைத்தாலும் வருவதில்லையாம் எம்பி. “இப்படி இருந்தால் எப்படி?” என திமுகவினர் வருத்தப்படும் அதேசமயம், “கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக செயலாளரும் அங்கிருக்கும் எம் எல்ஏ-க்களும் எங்கள் எம்பி-யை மதிப்பதே இல்லை. அப்படி மதியாதார் வாசல் மிதிப்பது எப்படி? அதனால் தான் நாங்கள் கள்ளக்குறிச்சி நிகழ்ச்சிகளை சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை” என்கிறது கௌதமசிகாமணி தரப்பு.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in