திகிலடைந்த திமுக கவுன்சிலர்கள்!

திகிலடைந்த திமுக கவுன்சிலர்கள்!

கம்பம் நகராட்சியில் 7.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வாரச் சந்தை வளாகம் கட்டுவதற்கு அண்மையில் டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தொகை பெரிது என்பதால் ‘கட்டிங்’கும் லம்பாகக் கிடைக்கும் என கனவில் இருந்தார்களாம் ஒரு சில திமுக கவுன்சிலர்கள். ஆனால், 80 லட்ச ரூபாய் கமிஷனையும் திமுக பெரும்புள்ளி ஒருவரே மொத்தமாக லபக்கிக்கொண்டு போய்விட்டாராம். இதைக் கேள்விப்பட்டு திகிலடைந்த திமுக கவுன்சிலர்கள், “அண்ணே... நாங்களும் நகை, வீடுகளை அடமானம் வைச்சுத்தான் எலெக் ஷன்ல நின்னிருக்கோம். அதனால எங்களுக்கும் ஏதாச்சும் பாத்துச் செய்யுங்க" என பெரும்புள்ளியைப் பார்த்துக் கேட்டார்களாம். அவர்களுக்கு தலா 30 ஆயிரத்தைக் கொடுத்துவிட்டு, “அப்புட்டுத்தாம்பே... ஆளவிடுங்க” என்று சொல்லிவிட்டாராம் பெரும்புள்ளி. இதனால் ஏக கடுப்பில் இருக்கும் கவுன்சிலர்கள், “அடுத்த டெண்டர் வரட்டும் பாத்துக்குறோம்” என்று சபதம் போட்டுவிட்டு காத்திருக்கிறார்களாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in