அப்படியெல்லாம் ‘குளிப்பாட்ட’ முடியாது!

சாலை மறியல்
சாலை மறியல்

அண்மையில், வந்தனாகுறிச்சி என்ற ஊரில் செயல்படும் கிரஷர் குவாரியை மூடக்கோரி சாலை மறியல் போராட்டம் நடத்தி நடத்தினார் கந்தர்வகோட்டை சிபிஎம் எம்எல்ஏ-வான சின்னதுரை. அந்த குவாரியால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது என்பது தான் குற்றச்சாட்டு. ஆனால், இதே கந்தர்வகோட்டை தொகுதியில் புனல்குளம் பகுதியில் இன்னொரு கிரஷர் குவாரி சட்டவிரோதமாக இயங்கி வருகிறதாம். அதை யாரும் கண்டுகொள்ளவில்லை. அப்படி கண்டும் காணாமல் இருக்க சம்பந்தப்பட்ட அனைவரையும் அந்த கிரஷர் பார்ட்டி ‘குளிப்பாட்டி’ வைத்திருக்கிறாராம். 17 வருடங்களாக வந்தனாகுறிச்சி கிரஷரை நடத்தும் முருகேசன் அதிமுககாரர். அவரிடமும் சிலர் வாளியும், கையுமாய் போய் நின்றார்களாம். ஆனால், தன்னால் அப்படியெல்லாம் ‘குளிப்பாட்ட’ முடியாது என்று முடிவாகச் சொல்லிவிட்டாராம் முருகேசன். அதன் பிறகுதான், அந்த கிரஷரால் மக்களுக்கு இடையூறு என்று சொல்லி திடீர் போராட்டம் நடத்தி திக்குமுக்காட வைத்தார்களாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in