பரிசோதனைப் பெட்டகத்தில் பலே ஊழல்!

கரோனா கிட்
கரோனா கிட்

அதிமுக ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர் கரோனோ உபகரணங்கள், மருந்துகள் வாங்கியதில் கோடி கோடியாக கொள்ளையடித்துவிட்டதாக திமுக பழிபோடுகிறது. ஆனால், இப்போது அதைக்காட்டிலும் நூதன முறையில் பகல் கொள்ளை நடப்பதாக அதிகாரிகள் புலம்புகிறார்கள். உதாரணத்துக்கு ஒன்று, தமிழகத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் கரோனா தொற்றைக் கண்டறியும் பரிசோதனைப் பெட்டகம் என்ற பெயரில் ‘கரோனா கிட்’ ஒன்று ஊரக வளர்ச்சித் துறையிலிருந்து அண்மையில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

கே.ஆர்.பெரியகருப்பன்
கே.ஆர்.பெரியகருப்பன்

ஒரு நார்மல் தெர்மா மீட்டர், ஒரு இன்ஃப்ரா ரெட் தெர்மாமீட்டர், ஒரு பல்ஸ் ஆக்ஸி மீட்டர் - இது தான் அந்தக் கிட்டில் இருக்கிறது. கம்பெனியின் விலைப்புள்ளிப்படியே இந்த மூன்றும் சேர்த்து ரூ.1,719 தான் வருகிறதாம். அதிகம் போனால் ரூ.2 ஆயிரம் இருக்கலாம் என்கிறார்கள். ஆனால், இதற்கு ரூ.13 ஆயிரம் விலை நிர்ணயம் செய்து அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலர்களை (பிடிஓ) செக் அனுப்பச் சொல்லியிருக்கிறார்களாம். ஒரு ஒன்றியத்தின்கீழ் 50-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகள் வரும் என்பதால், அத்தனைக்கும் சேர்த்து மொத்தமாக செக் கொடுக்க பெரும்பாலான பிடிஓ-க்கள் தயங்குகிறார்களாம். சங்க நடவடிக்கைகளில் தீவிரமாக இருக்கும் பிடிஓ-க்கள், “2 ஆயிரம் ரூபாய்கூட பெறாத கிட்டுக்கு 13 ஆயிரம் ரூபாயெல்லாம் தரமுடியாது” என கறாராகச் சொல்லிவிட்டார்களாம். இன்னும் சிலர், இந்த விவகாரத்தை அமுதா ஐஏஎஸ் மூலமாக முதல்வரின் கவனத்துக்குக் கொண்டுசெல்லும் முழு முயற்சியில் இருக்கிறார்களாம். இதனிடையே சிலர், ‘தமிழகத்தில் மொத்தம் 12,524 ஊராட்சிகள் இருக்கின்றன. ஒரு கிட்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் கமிஷன் வைத்தாலும் சுமார் 12.5 கோடி ரூபாய்க்கு இதில் ஊழல் நடந்திருக்கிறது. இதெல்லாம் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருக்குத் தெரிந்து தான் நடக்கிறதா? உளவுத் துறை இதையெல்லாம் முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு போகாதா? என சமூக வலைதளங்களில் விலைப்பட்டியல் சகிதம் விவாதம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in