சீமான் கட்சியில் இருக்காதே..!

சீமான்
சீமான்

‘மூவேந்தர் என்றால் அது நாங்கள்தான்’ என்று முக்குலத்து சமூகம் சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில், உள்ளாட்சித் தேர்தலில், தேவேந்திர குல வேளாளர்களை குஷிப்படுத்தும் வகையில் ‘மூவேந்தர் வம்சத்தினர்’ என்று அவர்கள் குறித்துப் பேசிவிட்டார் சீமான். இதையடுத்து, முக்குலத்தோர் அமைப்புகள் இப்போது சீமானுக்கு எதிராகச் சீறுகின்றன. தேவரினத்தை மூவேந்தர் மரபு கிடையாது என்று வரலாறு தெரியாமல் பேசும் சீமான் கட்சியில், நம் சமூகத்தினர் யாரும் இருக்கக்கூடாது என்று போஸ்டர் புரட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். “மூவேந்தர் காலம் தொட்டு சொந்த ரத்தங்களுக்குள்ளேயே யுத்தம் செய்ததாலேயே தமிழினம் வீழ்ந்தது என்ற வரலாற்று உண்மையை உணர்ந்து, இனியேனும் சாதி, மத உணர்வுகளைப் புறந்தள்ளுங்கள் உறவுகளே” என்று முன்பு சீமான் பேசிய பேச்சையே இதற்கு மறுப்பாக்கி, மன்றாடிக் கொண்டிருக்கிறார்கள் சீமானின் தம்பிகள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in