மாட்டிக்காதீங்க மனோதங்கராஜ்!

மாட்டிக்காதீங்க மனோதங்கராஜ்!

குமரி மாவட்டம், வியன்னூர் பகுதியைச் சேர்ந்த தீபா என்பவர், தன்னை சிலர் கூட்டுப் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியதாக அண்மையில் போலீஸில் புகார் கொடுத்தார். இது தொடர்பாக திருவட்டாறு ஒன்றிய திமுக செயலாளர் ஜான் பிரைட், அருமனை ஸ்டீபன் உள்ளிட்ட முக்கிய நபர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. ஆனாலும் தலைமறைவாக இருக்கும் ஜான் பிரைட் இதுவரை கைது செய்யப்படவில்லை. அவரைக் கட்சியில் இருந்தும் நீக்கவில்லை. அவருக்கு, உள்ளூர் அமைச்சர் மனோதங்கராஜின் பரிபூரண ஆசி இருப்பதே இதற்கெல்லாம் காரணம் என்கிறார்கள். இது தொடர்பாக தீபாவிடம் மனோ தங்கராஜே பேசும் ஆடியோ ஒன்றும் அண்மையில் வெளியாகி சர்ச்சையானது. ஜான் பிரைட்டைக் காப்பாற்ற அமைச்சர் எதற்காக இவ்வளவு மெனக்கிடுகிறார் என, திமுகவினரே வியக்குமளவுக்கு இருக்கிறதாம் மனோதங்கராஜின் மறைமுக முன்னெடுப்புகள்.

Related Stories

No stories found.