மொத்தச் செலவும் விஜய் வசந்த் தலையில்..!

விஜய் வசந்த்
விஜய் வசந்த்

ராகுலின் இந்திய ஒற்றுமைப் பயணத்தில் சளைக்காமல் நடந்த காங்கிரஸ் எம்பி-யான விஜய் வசந்த், அலுப்பின் மிகுதியில் ஒரு திண்ணையில் படுத்துத்தூங்கிவிட்டார். அதை சிலர் படம் எடுத்து இப்போது வைரலாக்கி வருகிறார்கள். “இதெல்லாம் இப்ப ட்ரெண்டு” என சிலர் கிண்டலடித்தும் வருகிறார்கள். இதனிடையே, விஜய் வசந்த் இன்னொரு சங்கடத்திலும் இருக்கிறாராம். ராகுல் காந்தின் கன்னியாகுமரி நடைபயணச் செலவு முழுவதையும் தொகுதி எம்பி என்ற முறையில் விஜய் வசந்த் தலையில் ஏற்றிவிட்டார்களாம். வரவேற்புச் செலவு, வாகனச் செலவு, ஓட்டல் அறைகளுக்கான செலவு என செலவு தொகை கோடியைத் தாண்டிவிட்டதாம். காங்கிரசுக்கு ஒன்றுக்கு மூன்று எம்எல்ஏ-க்கள் குமரி மாவட்டத்தில் இருந்தும் செலவு விஷயத்தில் அவர்கள் யாரும் அவ்வளவாய் கண்டுகொள்ளவில்லையாம்.

இதனால் தர்மசங்கடத்தில் இருக்கும் விஜய் வசந்த், “அப்பா (வசந்தகுமார்) காலத்தில் அவரே பணத்தை எடுத்துச் செலவு செய்துவிடுவார். நான் அப்படிச் செய்யமுடியாது. குடும்ப உறுப்பினர்களிடம் அனுமதி கேட்டுத்தான் பணத்தை எடுக்க முடியும். இந்த நிலையில், ராகுல் வருகையால் நிதி நெருக்கடிக்குள் எக்குத்தப்பாய்ச் சிக்கிக்கொண்டேன்” என தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்புகிறாராம் விஜய் வசந்த்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in