காங்கிரஸ் தலைகளை தெறிக்கவிட்ட ஜோதிமணி!

பயணத்தின் போது...
பயணத்தின் போது...

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணம் தமிழகத்தில் நகர்ந்தபோது, தமிழக காங்கிரஸ் தலைவர்களில் ஜோதிமணி கவனிக்கத்தக்க மனிதராக வலம் வந்தார். இத்தனைக்கும் ராகுல் பயணத்துக்கான தமிழக அமைப்பாளராக இருந்தவர் காங்கிரஸ் எம்பி-யான ஜெயக்குமாராம். அவரை எல்லாம் பின்னுக்குத்தள்ளி பல இடங்களில் தன்னையே முன்னிலைப்படுத்திக் கொண்டார் ஜோதிமணி. ராகுலிடம் தனக்கிருக்கும் அறிமுகத்தை வைத்து அவரை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பைப் பெற்ற ஜோதிமணி, வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலரைப் பற்றிய மைனஸ் தகவல்களை ராகுல் மைண்டில் போட்டுவிட்டாராம். இதற்குப் பயந்து தமிழக காங்கிரஸ் விஐபி-க்கள் சிலர் ஜோதிமணியைக் கண்டாலே தலைதெறிக்க ஓடிய காமெடிக் காட்சிகளையும் கண்டதாக ராகுல் யாத்திரைக்குப் போய் வந்தவர்கள் சொல்லிச் சிரிக்கிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in