பைபாஸில் பாஜகவுக்குப் போன பழனிச்சாமி!

பைபாஸில் பாஜகவுக்குப் போன பழனிச்சாமி!
பாஜகவில் இணைந்தபோது...

காரைக்குடி தொகுதியின் முன்னாள் அதிமுக எம்எல்ஏவான சோழன் சித.பழனிச்சாமி கடந்த வாரம் பாஜகவில் இணைந்தார். இவரை கட்சியில் சேர்ப்பது குறித்து பாஜக தலைமையிலிருந்து சிவகங்கை மாவட்ட பாஜகவினரிடம் ஒப்பீனியன் கேட்டார்களாம். அதற்கு, “பெருசா தொண்டர் செல்வாக்கெல்லாம் இவருக்கு இல்லை. இவரைச் சேர்ப்பதால் நமக்கு எந்த பலமும் கூடப்போவதில்லை” என்று சொன்னார்களாம். இருப்பினும், “முன்னாள் எம்எல்ஏ, ஜெயலலிதா காலத்திலேயே 10 ஆண்டுகள் மாவட்டச் செயலாளராக இருந்திருக்கிறார்” என்று சொந்தக் கட்சியினருக்குச் சமாதானம் சொல்லி, பழனிச்சாமியை பாஜகவில் சேர்த்தார்களாம். சிவகங்கைக்காரரான எச்.ராஜா இருந்தும் அவரைத் தேடாமல், கரூர் பைபாஸைப் பிடித்து அண்ணாமலை ரூட்டில் பாஜகவுக்கு அப்ளிகேஷன் போட்டாராம், பலே பழனிச்சாமி.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in