சிக்கலில் சின்னப்பாவின் மா.செ பதவி!

கு.சின்னப்பா
கு.சின்னப்பா

திமுக கூட்டணியில் அரியலூர் தொகுதி எம்எல்ஏ-வாக ஜெயித்தவர் அரியலூர் மாவட்ட மதிமுக செயலாளர் கு.சின்னப்பா. மாவட்டச் செயலாளரே எம்எல்ஏ ஆனதால் கட்சிக்கு கூடுதல் பலம் சேர்க்கலாம் என மதிமுகவினர் உற்சாகமாய் இருந்தார்கள். அந்த எதிர்பார்ப்பை எல்லாம் சின்னாபின்னமாக்கி விட்டாராம் சின்னப்பா. வைகோவின் நம்பிக்கைக்குரிய தளபதியான சின்னப்பா, வயோதிகம் காரணமாக தொகுதிக்குள் அதிகமாக தலைக்காட்டுவதில்லை என்கிறார்கள். இதனால், அவரிடம் இருக்கும் மாவட்டச் செயலாளர் பதவியையாவது துடிப்பான இளைஞர் ஒருவருக்கு மாற்றிக் கொடுக்கலாமே என கட்சியின் இளம் தலைவர் துரை வையாபுரியிடம் மாவட்ட மதிமுகவினர் சிலர் கோரிக்கை வைத்திருக்கிறார்களாம். சின்னப்பாவுக்கு மாற்றாக வழக்கறிஞர் மனோகரன், வாரணவாசி ராஜேந்திரன் ஆகிய இருவரில் ஒருவரை மாவட்டச் செயலாளர் ஆக்கலாம் என்பதும் இவர்கள் வைக்கும் கோரிக்கையாம். இருவருமே துரை வையாபுரியின் துடிப்பான ஆதரவாளர்கள் தான் என்றாலும், “இத்தனை ஆண்டு காலம் கட்சிக்காக உழைத்த சின்னப்பாவை எப்படி ஒதுக்குவது” என வைகோவிடம் சிலர் சிம்பதியாக பேசுவதால் முடிவெடுக்க முடியாமல் இருக்கிறாராம் துரை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in