செல்லப்பாண்டியன் மீது செம கடுப்பு!

செல்லப்பாண்டியன் மீது செம கடுப்பு!
செல்லப்பாண்டியன்

தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் ஆறு சட்டமன்றத் தொகுதிகள். இதில் மூன்று தொகுதிகளை உள்ளடக்கிய வடக்கு மாவட்ட அதிமுகவுக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவும் எஞ்சிய மூன்று தொகுதிகளை உள்ளடக்கிய தெற்கு மாவட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் சண்முகநாதனும் செயலாளர்கள். அண்மையில் நடந்த உட்கட்சித் தேர்தலிலும் இவர்களே தத்தமது பதவிகளைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், தனது ஆதரவாளர்கள் புடைசூழ ஓபிஎஸ்சை சந்தித்த மாவட்டத்தின் இன்னொரு முன்னாள் அமைச்சரான செல்லப்பாண்டியன், மொத்தமுள்ள ஆறு தொகுதிகளையும் தலா இரண்டு தொகுதிகள் வீதம் பிரித்து தூத்துக்குடி அதிமுக மத்திய மாவட்டத்தை உருவாக்கி அதற்கு அடியேனை மாவட்டச் செயலாளராக அமர்த்த வேண்டும் என அன்புக் கோரிக்கை வைத்தாராம். அத்துடன், சண்முகநாதனுக்கு எதிராக 44 புகார்கள் அடங்கிய பட்டியல் ஒன்றையும் ஆதாரத்துடன் அளித்துவிட்டு வந்தாராம். இந்த விஷயம் தெரிந்து, செல்லப்பாண்டியன் மீது இப்போது செம கடுப்பில் இருக்கிறாராம் சண்முகநாதன்.

Related Stories

No stories found.