எத்தனை ரெய்டு வந்தாலும் தம்பி சமாளிச்சுடுவாரு!

எத்தனை ரெய்டு வந்தாலும் தம்பி சமாளிச்சுடுவாரு!

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் புதுக்கோட்டை இலுப்பூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை நேற்று அதிரடி(!) சோதனை நடத்தியது. அதுசமயம் விஜயபாஸ்கரின் அப்பா சின்னதம்பியும் அண்ணன் உதயகுமார் மட்டுமே வீட்டில் இருந்தார்கள். ரெய்டுக்கு வந்த அதிகாரிகளை கூலாக வரவேற்ற சின்னத்தம்பி, பெரிதாக ரியாக்‌ஷன் ஏதும் காட்டாமல் அமைதியாக உட்கார்ந்திருந் தாராம். ஆனால் விஷயம் தெரிந்து வெளியில் திரண்ட அதிமுககாரர்கள், தமிழக அரசுக்கு எதிராகவும் போலீசுக்கு எதிராகவும் கோஷமிட்டு விசுவாசம் காட்டினார்கள். சத்தம் கேட்டு வெளியே வந்த சின்னத்தம்பி, “வெள்ளை வேட்டி கட்டினாலே இது மாதிரியான சோதனைகளை எல்லாம் சந்திச்சுத்தான் ஆகணும். பிரதமர் தொடங்கி முதல்வர் வரைக்கும் அரசியலில் இருக்கிற பலரும் இதையெல்லாம் கடந்துதான் வந்திருக்காங்க. ஒருத்தர் வீட்டுல ரெய்டு நடந்துருச்சுன்றதுக்காக அவங்கள குற்றவாளின்னு சொல்லிடமுடியாது. அதனால எல்லாரும் ஆர்ப்பாட்டம் பண்ணாம அமைதியா இருங்க. எத்தனை ரெய்டு வந்தாலும் தம்பி சமாளிச்சிடுவாரு” என்று கட்சியினரை அமைதிப்படுத்தினார். இதைக்கேட்டதும், ‘ரைட்டு... அப்பாவே சைலண்டா இருக்காரு; நாம ஏன் சவுண்டு விடணும்’ என அடக்கி வாசிக்க ஆரம்பித்துவிட்டனர் ஆர்வத்துடன்(!) கோஷம்போட வந்திருந்த அதிமுககாரர்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in