விட்டு விளாசும் விஜயபாஸ்கர்!

விட்டு விளாசும் விஜயபாஸ்கர்!

“திமுகவுடன் ஏதோ டீல் பேசிவிட்டார் போலிருக்கிறது. அதனால் தான் ஆள் சைலன்ட்” என அதிமுகவினராலேயே அதிகம் முணுமுணுக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், இப்போது போகுமிடமெல்லாம் திமுகவை பொளந்து கட்டுகிறார். புதுக்கோட்டையில் நடைபெற்ற அதிமுக மேதின பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், ‘’எவ்வளவு வெயில் பாத்தீங்களா... பகல் நேரத்தில் சுட்டெரிக்கும் சூரியனின் தாக்கம், நைட்டிலும் நம்மை வாட்டி வதைக்கிறது. அப்படித்தான் இப்ப இருக்கிற ஆட்சியும் மக்களை வாட்டி வருகிறது. சூரியன் சுட்டெரிப்பது நம்மை மட்டுமல்ல... திமுககாரர்களையும்தான். தமிழ்நாட்டில் ஏன் இந்த ஆட்சி வந்தது என்று திமுகவினரே புலம்பும் அளவுக்கு நிலைமை வந்துவிட்டது. அதிமுகவினர் மீது அடுக்கடுக்காய் பொய் வழக்குகள் போடப்படுகிறது. என் மீதும் நிறைய வழக்குகள் இருக்கு. அதையெல்லாம் சமாளிக்கும் தைரியம் எனக்கு இருக்கு. அதற்காக, அதிமுக தொண்டன் மீது பழிவாங்கும் நோக்கில் இனியும் திமுக வழக்குப் போட்டால் நான் பாத்துக்கிட்டு சும்மா இருக்க மாட்டேன்" என்று பொங்கியதைப் பார்த்து பொல்லாப்புப் பேசிய அதிமுககாரர்களே அதிசயித்துக் கிடக்கிறார்கள்.

Related Stories

No stories found.