வீட்டுக்கு வீடு கங்கா திட்டம்!

அமித் ஷா
அமித் ஷா

இந்திய தேசத்தின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 50 லட்சம் இல்லங்களில் தேசியக் கொடியை ஏற்றும் தேசபக்தி திட்டத்தை அறிவித்திருக்கிறார் பாஜக தலைவர் அண்ணாமலை. அடுத்ததாக, பக்தி மார்க்கத்திலும் தமிழக மக்களின் உள்ளத்தைத் தொடவும் ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார்களாம். தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒரு கோடி எண்ணிக்கையிலான வீடுகளுக்கு கங்கா தீர்த்தத்தைக் கொண்டுபோய் சேர்ப்பதுதான் தமிழக பாஜகவுக்கு அமித் ஷா கொடுத்திருக்கும் அடுத்த யோசனையாம். இது உள்பட மக்களவைத் தேர்தல் சமயத்தில் மக்களை எளிதில் அணுக வசதியாக 25 வீடுகளுக்கு ஒருவர் வீதம் பொறுப்பாளர்களை நியமித்து காரியமாற்றி வருகிறார்களாம் கமலாலய பார்ட்டிகள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in