இன்ச் கேப்பில் இன்வைட் அனுப்பிய பாஜக!

சுதாகரன்
சுதாகரன்

கேரள காங்கிரசில் கோஷ்டி பூசலை முடிவுக்கு கொண்டுவரவே மாநிலத் தலைவராக இருந்த முள்ளப்பள்ளி ராமச்சந்திரனையும் எதிர்கட்சித் தலைவராக இருந்த ரமேஷ் சென்னிதலாவையும் மாற்றிவிட்டு அவர்களுக்கு பதிலாக முறையே கே.சுதாகரனையும் வீ.டி.சதீசனையும் நியமித்தது அகில இந்திய காங்கிரஸ் தலைமை. ஆனால், இப்போது இவர்களுக்குள்ளும் கோஷ்டி அரசியல் கொடிகட்டிப் பறக்கிறது. சதீசன் தரப்பை உளவுபார்த்ததாக அண்மையில் கே.சுதாகரன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. கூடவே, நிர்வாகிகள் நியமனத்தில் தங்கள் கருத்தைக் கேட்கவில்லை என நான்கு எம்பி-க்கள் சேர்ந்து சுதாகரனுக்கு எதிராக டெல்லிக்கு கடிதம் எழுதினர். இப்படி தொடர் புகார்களால் அப்செட்டில் இருக்கும் சுதாகரனுக்கு இன்ச் கேப்பில் இன்வைட் அனுப்பி இருக்கிறதாம் மாநில பாஜக.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in