தாமரையை தாக்க வேண்டாம்!

தாமரையை தாக்க வேண்டாம்!
அண்ணாமலையும் எடப்பாடியும்

உள்ளாட்சித் தேர்தலில், தனித்தனியாகப் போட்டியிட்டாலும் அதிமுகவும் பாஜகவும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசாமல் நாகரிகம் காக்கிறார்கள். நீட் விவகாரத்தில்கூட ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருமே ஆளுநருக்கு ஆதரவாகவே அறிக்கை விட்டார்கள். இதனிடையே ஈபிஎஸ் தென்மாவட்டப் பிரச்சாரத்துக்கு வந்தபோது, ”பாஜகவை அட்டாக் பண்ணி பேசினாதான் சிறுபான்மையினர் ஓட்டுகளை வாங்கமுடியும்” என்று தென் மாவட்ட முக்கியப் புள்ளி ஒருவர் யோசனை சொன்னாராம். அதற்கு, ”கொஞ்சம் பொறுங்க. 5 மாநில தேர்தல் ரிசல்ட் வரட்டும். உபியில பாஜக தோத்துருச்சுன்னா மத்தியில பாஜக மறுபடி ஆட்சிக்கு வராதுன்னு உறுதியா நம்பலாம். அதுக்கு முன்னாடி அவசரப்பட்டு நம்ம ஏதாச்சும் வாய்விட்டா நமக்குத்தான் சிக்கல்” என்று சொன்னாராம் ஈபிஎஸ்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in