லூலு மால் - பின்னணியில் பினராயி விஜயன்

லூலு மால் - பின்னணியில் பினராயி விஜயன்
பினராயி விஜயன்

முதல்வரின் துபாய் பயணத்தின் போது, லூலு மால் நிறுவனத்தைத் தமிழகத்திலும் தொடங்க 3,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் பின்னணியில் இருந்தவர் கேரள முதல்வர் பினராயி விஜயனாம். லூலு ஷாப்பிங் மாலின் உரிமையாளர் யூசுப் அலி கேரளத்தைச் சேர்ந்தவர். தனது நிறுவனத்தின் சி.எஸ்.ஆர் நிதி மூலம் கேரளத்தின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த உதவிவரும் இவர், துபாயில் இருக்கும் தொழில் நிறுவனங்களின் முதலீட்டையும் கேரளத்திற்கு ஈர்த்துத் தருபவர். இப்படியான சூழலில், முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய ‘உங்களில் ஒருவன்’ நூல் வெளியீட்டிற்கு வந்தபோதே பினராயி விஜயன் இதுகுறித்து மு.க.ஸ்டாலினிடம் பேசினாராம். இதையடுத்தே, இப்போது லூலு மால் ஒப்பந்தம் உறுதியாகியிருக்கிறது.

Related Stories

No stories found.