இன்னும் நூறு பேர் இருக்காங்க!

இன்னும் நூறு பேர் இருக்காங்க!
Ravi Choudhary

மேற்கு வங்கத்தை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசில் சீனியர் அமைச்சராக இருந்த பார்த்தா சட்டர்ஜி ஊழல் வழக்கில் அண்மையில் கைதானார். இவரது நெருங்கிய சகாவான அர்பிதா முகர்ஜியும் அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்டுள்ளார். மேற்குவங்கத்தில் நடந்துள்ள ஆசிரியர் நியமன ஊழலில் இவர்களைப் போலவே இன்னும் பலரும் சிக்கக்கூடும் என்கிறார்கள். இந்த ஊழலில் தொடர்புடைய 100 பேர் கொண்ட பட்டியலை அமித் ஷாவிடம் அளித்திருக்கிறாராம் மாநில பாஜக தலைவர் சுவந்து அதிகாரி. இந்தப் பட்டியலில் இருப்பவர்கள் மீது நடவடிக்கைகள் பாய்ந்தால் திரிணமூல் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்படுமாம். இது அக்கட்சிக்கு 2024 மக்களவைத் தேர்தலிலும் பெரும் சவாலாக இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in