பாஜகவின் பாயாசம் பாலிடிக்ஸ்!

பாஜகவின் பாயாசம் பாலிடிக்ஸ்!
சுரேந்திரன்

கேரள அரசியல் கட்சிகள், சபரிமலையை வைத்து அரசியல் செய்வதை விடவே மாட்டார்கள் போலிருக்கிறது. இப்போது அரவணைப் பாயாசத்தை வைத்து, புதிதாக ஒரு அரசியல் ஆட்டத்தைத் தொடங்கியிருக்கிறது கேரள பாஜக. அரவணைப் பாயாசத்துக்கான சர்க்கரையை, இஸ்லாமியர் ஒருவரிடம் இருந்து தேவசம்போர்டு கொள்முதல் செய்திருப்பதாக பாஜகவினர் போர்க்கொடி தூக்கினார்கள். அந்தச் சர்க்கரைப் பாக்கெட்டில் ‘ஹலால் செய்யப்பட்டது’ என்ற வாசகங்கள் இருப்பதை சுட்டிக்காட்டி, மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் பிரச்சினை கிளப்பியுள்ளார். அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் அப்படிப் போட்டிருப்பதாக சம்பந்தப்பட்ட நிறுவனம் விளக்கம் அளித்தும்கூட, பிரச்சினையை கேரள உயர் நீதிமன்றம்வரை கொண்டு போய்விட்டார்கள். இதனிடையே, “சபரிமலையில் காணிக்கை போடாதீர்கள். பந்தளம் மகாராஜா குடும்பத்தினர் தயாரிக்கும் அரவணையை மட்டும் வாங்குங்கள்” என்ற பிரச்சாரத்தையும் முன்னெடுத்திருக்கிறது பாஜக. இந்நிலையில், “அரவணைப் பாயாசம் விவகாரத்தில் வதந்திகளைப் பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்திருக்கிறது தேவசம் போர்டு.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in