அரசரா... அண்ணன் நேருவா?

அரசரா... அண்ணன் நேருவா?
திமுகவினரின் ஃப்ளெக்ஸ்

திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, மன்னார்புரம் மேம்பாலப் பணிகள் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டன. ஆனால், இடையில் சுமார் அரை ஏக்கர் நிலம் ராணுவ அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததால், திட்டமிட்டபடி மேம்பால பணிகளை முடிக்க முடியாமல் கிடப்பில் போனது. இந்த நிலையில் மேம்பாலப் பணிக்காக, அந்த அரை ஏக்கர் நிலத்தை ஒதுக்கி பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அண்மையில் ஒப்புதல் அளித்தார்.

காங்கிரஸாரின் ஃப்ளெக்ஸ்
காங்கிரஸாரின் ஃப்ளெக்ஸ்

உடனே, இதற்கு உரிமை கொண்டாடும் விளம்பர யுத்தம் தொடங்கிவிட்டது. ராஜ்நாத் சிங்கை நான் பலமுறை சந்தித்து வலியுறுத்தியதன் பேரிலேயே காரியம் கைகூடி இருக்கிறது என திருச்சி காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் அறிக்கை கொடுத்தார். இதைத் தொடர்ந்து, திமுக மாநகர் மாவட்டச் செயலாளர் அன்பழகன், ‘எங்கள் அமைச்சர் அண்ணன் நேரு, முதல்வர் ஸ்டாலினிடன் பேசி இந்தக் காரியத்தை முடித்திருக்கிறார்’ என அறிக்கை கொடுத்தார். அத்தோடு நிற்கவில்லை, அரசருக்கு நன்றி தெரிவித்து காங்கிரஸாரும், நேருவுக்கு நன்றி சொல்லி திமுகவினரும் பாலம் செல்லும் திசையில் ஆளுக்கொரு பக்கம் ஃப்ளெக்ஸ்களை வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in