சசிகலாவிடம் அப்பாயின்மென்ட் கேட்ட அன்வர்ராஜா!சசிகலாவிடம் அப்பாயின்மென்ட் கேட்ட அன்வர்ராஜா!
அன்வர்ராஜா

“யார் உங்களுக்கு எதிராக வசைபாடினாலும் அதற்கு எதிர்க் கருத்துச் சொல்ல வேண்டாம்” என்பது, சசிகலாவுக்கு அவரது ஆலோசகர்கள் தந்திருக்கும் அட்வைஸ். அதனால்தான், ஓவர் டோஸ் கொடுத்த எடப்பாடியாரின் கருத்துக்குக்கூட சசிகலா ரியாக்‌ஷன் காட்டவில்லையாம். இதனிடையே, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அன்வர் ராஜாவும் வெல்லமண்டி நடராஜனும் சசிகலாவை நேரில் சந்திக்க அப்பாயின்மென்ட் கேட்டார்களாம். அவர்களை அமைதிகாக்கும்படி சொல்லிவிட்டாராம் சசிகலா. ஆனால், சுற்றி இருப்பவர்களோ, “அவர்களே வருகிறோம் என்று சொல்லும்போது நாம் ஏன் அதைத் தடுக்க வேண்டும். இப்படி ஒவ்வொருவராக வர ஆரம்பித்தால்தான் மதில் மேல் பூனையாக இருக்கும் மற்றவர்களும் நம்மை நோக்கி வருவார்கள்” என்று சொல்கிறார்களாம்.

Related Stories

No stories found.