அஞ்சுகத்துக்கு அதிர்ஷ்டம் அடிக்குமா?

அஞ்சுகத்துக்கு அதிர்ஷ்டம் அடிக்குமா?
அஞ்சுகம் பூபதி

தஞ்சை மாநகராட்சிக்கு யாரை மேயராக்குவது என்பதில் திமுக தலைமைக்கு குழப்பம் நீடிக்கிறது. முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் பூபதியின் மகள் அஞ்சுகத்தை, பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆதரிக்கிறார்கள். மருத்துவரான அஞ்சுகம், தயாளு அம்மாளின் உடல் நலத்தை அருகிலிருந்து கவனித்துக் கொண்டவர் என்பதால், அவருக்கே தலைமை கொடி அசைக்கும் என்கிறார்கள். ஆனால், இவருக்குப் போட்டியாக சண். ராமநாதன் களத்தில் நிற்கிறார். இசை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த இவர், தஞ்சை மத்திய மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராக இருப்பதால், உதயநிதிக்கு நெருக்கமானவர். அதனால் எப்படியும் உதயநிதி தனக்கு கைகாட்டுவார் என நம்புகிறார் ராமநாதன். இப்படி, போட்டியில் இருக்கும் இரண்டு பேருமே வேண்டப் பட்டவர்களாக இருப்பதால், யாரை டிக் செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறதாம் திமுக தலைமை.

சண். ராமநாதன்
சண். ராமநாதன்

Related Stories

No stories found.