அண்ணாமலை இப்படி அசிங்கப்படலாமா?

கனிமொழியுடன் ஊராட்சித் தலைவர்கள்...
கனிமொழியுடன் ஊராட்சித் தலைவர்கள்...

கனிமொழியின் தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி. கடந்த வாரம், இந்தத் தொகுதியைச் சேர்ந்த திமுக ஊராட்சி தலைவர்கள் 16 பேர் அண்ணாமலையைச் சந்தித்து தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டதாக பரபரப்புக் கிளம்பியது. இதற்கான படத்தையும் பாஜக தரப்பில் வெளியிட்டிருந்ததால் பதறிப்போனாரம் கனிமொழி. உடனே, இதுபற்றி விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ-வான மார்கண்டேயனிடம் விசாரித்தாராம். அவரும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சித் தலைவர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போது, “நாங்கள் பாஜகவில் எல்லாம் சேரவில்லை. மத்திய அரசின் 100 நாள் வேலைத் திட்டம் தொடர்பாக பேசுவதற்காக அண்ணாமலையைச் சந்திக்கலாம் என்று சொன்னதால் போனோம். அப்படிப் போன எங்களை போட்டோ எடுத்து, பாஜகவில் சேர்ந்துவிட்டதாக வதந்தி பரப்பிவிட்டார்கள்” என்று சொன்ன ஊராட்சித் தலைவர்கள், கையோடு கனிமொழியையும் சந்துத்து தன்னிலை விளக்கம் தந்தார்களாம். “உண்மை நிலவரம் இப்படி இருக்க, விஷயம் தெரியாமல் அண்ணாமலை இப்படி அசிங்கப்படலாமா?” என திமுகவினர் அங்கலாய்க்கிறார்கள். பதிலுக்கு, “எங்கள் கட்சியில் சேர்ந்த திமுக ஊராட்சித் தலைவர்களை ஏதேதோ சொல்லி மிரட்டி மீண்டும் தங்கள் பக்கம் இழுத்துவிட்டது திமுக” என லாவணி பாடிக்கொண்டிருக்கிறது பாஜக.

மார்கண்டேயன் இதுகுறித்து விசாரித்தபோதுதான், மத்திய அரசின் நூறுநாள் வேலைத்திட்டம் தொடர்பாக அண்ணாமலையிடம் பேச அழைத்ததால் சென்றதாகவும், ஆனால் கட்சியில் சேர்ந்துவிட்டதாக பரப்பிவிட்டதாகவும் அவர்கள் தகவல் சொல்லியிருக்கிறார்கள். அத்துடன் அவர்கள் அனைவரும் வந்து கனிமொழியையும் சந்தித்து திரும்பினர்.

அண்ணாமலை இப்படிச் செய்யலாமா? என திமுகவினர் கேட்கும் நிலையில், எங்கள் கட்சியில் இணைந்தவர்களை மிரட்டி திமுக தங்கள் பக்கம் சேர்ந்திருக்கிறது என புதுக்குண்டு போடுகின்றனர் பாஜகவினர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in