அதுதான் அண்ணாமலை கணக்கா?

அதுதான் அண்ணாமலை கணக்கா?
அண்ணாமலை

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராகத்தான் பாஜக தலைவர் அண்ணாமலை ஊழல் பட்டியல் வாசிப்பார் என திமுக தரப்பிலேயே எதிர்பார்த்தார்களாம். ஆனால், அதைவிடுத்து மா.சுப்பிரமணியன், முத்துசாமி சம்பந்தப்பட்ட துறைகளில் ஊழல் என ஆர்ப்பரித்தார் அண்ணாமலை. அதுவும்கூட சத்தில்லாத குற்றச்சாட்டுகள். அதேசமயம், செந்தில் பாலாஜியை அண்ணாமலை எடுத்ததுமே தொடாமல் விட்டதற்கு கொங்கு மக்கள் வேறொரு கணக்குச் சொல்கிறார்கள். “மக்களவைத் தேர்தலில் கோவை அல்லது கரூரில் அண்ணாமலை போட்டியிடுவதாக இருக்கிறார். இந்த இரண்டு மாவட்டங்களுமே இப்போது செந்தில் பாலாஜியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த நிலையில், எடுத்தேன் கவிழ்த்தேன் என பாலாஜி விவகாரத்தை இப்போதைக்கு கையில் எடுக்க வேண்டாம். தேர்தல் நெருங்கும் சமயத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராக வில்லங்கத்தை கிளப்பி ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கலாம் என முடிவெடுத்தே அவரை இப்போதைக்கு டச் பண்ணாமல் விட்டிருக்கிறார் அண்ணாமலை” என்கிறார்கள் கொங்கு மக்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in