என்னங்க சார் உங்க திட்டம்..?

என்னங்க சார் உங்க திட்டம்..?
கிஃப்ட் வழங்கும் ரமேஷ்JK

வருவாய்த் துறை அமைச்சரான கே.கே.எஸ்.எஸ்.ஆர் அண்ணாச்சி, தனது அருப்புக்கோட்டை தொகுதி மக்களுக்கு தீபாவளி பரிசாக ஹாட் பேக், தட்டு உள்ளிட்ட அய்ட்டங்களை கிஃப்ட் பேக்காக கொடுத்து அசத்தி இருக்கிறார். அருப்புக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இந்த கிஃப்ட் கவனிப்பு மேளா மும்முரமாக நடந்திருக்கிறது. இந்த கிஃப்ட்களை மும்பையில் மொத்தமாக ஆர்டர் போட்டு வாங்கியதாம் அண்ணாச்சி வட்டாரம். அதுவல்ல முக்கிய செய்தி... இந்த கிஃப்ட்களை முன்னின்று வழங்கியது அமைச்சரின் மகன் ரமேஷ். இதைவைத்து, அண்ணாச்சி அருப்புக்கோட்டை நகராட்சி தலைவர் பதவிக்கு தனது மகனை தயார்படுத்துகிறாரோ என்ற பேச்சும் அலையடிக்க ஆரம்பித்திருக்கிறது.

கே.கே.எஸ்.எஸ்.ஆர்.
கே.கே.எஸ்.எஸ்.ஆர்.

இதை மறுக்கும் அண்ணாச்சி வட்டாரம், “தேர்தல் சமயத்திலும் இதுபோல கிஃப்ட்களை அண்ணாச்சி தனது தொகுதிக்குள் கொடுத்தார். ஆனால், கெடுபிடிகள் அதிகம் இருந்ததால் முழுமையாகக் கொடுக்கமுடியவில்லை. அப்போது விடுபட்ட மக்களுக்குத்தான் இப்போது இந்த கிஃப்ட்” என்கிறது. தொகுதி மக்களுக்கு மட்டுமல்லாது அண்ணாச்சியின் பிர்காவான விருதுநகர் தெற்கு மாவட்டத்தின் திமுக நிர்வாகிகள் அனைவருக்கும் அண்ணாச்சி அலுவலகத்திலிருந்து ஹாட் கேஷாகாவே தீபாவளி கிஃப்ட் போனதாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in